tamilnadu

டாஸ்மாக் கடை விற்பனை நேரத்தை குறைத்திடுக – சிஐடியு வலியுறுத்தல்

உதகை, ஜூன் 28- நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மது பானக் கடைகள் செயல்படும் நேரத்தை குறைத்திட வேண்டுமென டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் சம் மேளன மாநில துணைத்தலைவர் ஜே. ஆல் தொரை, நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதா வது, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கவும் பொது மக்க ளின் நடமாட்டத்தை குறைக்கவும் தற்போது பொது முடக்கம் அமலில் உள்ளது. பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடா மல் இருப்பதற்காக மளிகை கடைகள் உள் ளிட்ட அத்தியாவசியக் கடைகள் அனைத்தும் மாலை 4 மணிக்கே மூடப்படுகிறது. ஆனால், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மட்டும் இரவு எட்டு மணி வரை திறக்கப்படுகிறது. இதனால் பொது மக்களில் ஒரு பகுதியினர் இரவு எட்டு மணி வரை வெளியில் நடமாடி வருவதால் அரசின் பொது முடக்க நோக்கம் முழுமை பெறாத நிலை ஏற்படுகிறது.  மேலும், வன விலங்குகளின் தாக்கு தலில் இருந்து டாஸ்மாக் ஊழியர்களை பாது காக்கும் வகையில் கடைகளின் விற்பனை நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 5  மணி வரை மட்டுமே செயல்பட உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு  மனுவில் கூறப்பட்டுள்ளது.