tamilnadu

img

மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை சீரமைத்த பொதுமக்கள்

உதகை, ஆக.11- கூடலூரில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை பொதுமக்கள் சீரமைத்தனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 5 தினங்களாக கொட்டி தீர்த்த கன மழையின் காரணமாக பல்வேறு இடங்க ளில் சாலைகள் மற்றும் பாலங்கள் முற்றிலுமாக உடைந்து சேதம் அடைந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இந்நிலையில் மேல் கூடலூர், சில்வர் கிளவுட் எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள பாலம் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்தது. இதனை இந்த எஸ்டேட்டில் பணிபுரி யும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றி ணைந்து மரம் மற்றும் பலகைகளைக் கொண்டு சீர மைத்தனர்.