உதகை, மே 21- உதகையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத் திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத் துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குன்னூர் இடைக் கமிட்டி செயலாளர் ஜெ. ஆல் தொரை உதகையில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாள ரிடம் செவ்வாயன்று அளித்த மனு வில் கூறப்பட்டுள்ளதாவது, நீல கிரி மாவட்டம் அதிகரட்டி பேரூ ராட்சிக்கு உட்பட்ட குன்னகம்பை பகுதியில் உள்ள ஆலடாவேலி எஸ்டேட்டில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் கடந்த மே 7ஆம் தேதி யன்று அங்கு குடியிருக்கும் அம் மசை என்பவரது மகள் மங்கம்மா (19) துவைத்த துணிகளை காயப் போடும் போது மின்சாரம் தாக்கி யதால் உயிரிழந்தார். அப்போது மங் கம்மாவைக் காப்பாற்ற முயன்ற அவரது தம்பி திருப்பதி மற்றும் பக்கத்து வீட்டுச் சிறுமி சரண்யா ஆகிய இருவரும் மின்சாரம் தாக் கியதால் தூக்கி வீசப்பட்டனர்.
தற்போது இவர்கள் இருவரும் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். உயிரிழந்த மங்கம்மாள் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஜுன் மாதம் தன் திருமணத்திற்காக்க் காத் திருந்தவர் என்பது குறிப்பிடத்தக் கது. இவர்கள் குடியிருந்து வரும் வீட்டின் உள்ளே இருந்த மீட்டர் போர்டு சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வீட்டிற்கு வெளியில் மாற்றி அமைக்கப்பட் டுள்ளது. அது மட்டுமல்லாமல் சம் பவத்துக்கு முதல் நாள் மேற்படி மின் இணைப்பு உள்ள மின்கம்பத் தில் மின் பணியாளர் ஏறி வேலை செய்திருக்கிறார். மறுநாள் காலை யிலேயே இந்த மின் விபத்து ஏற் பட்டுள்ளது. வழக்கமாக துணிகளை காயப் போடும் கம்பியில் மேற்படி மின் சாரப் பணிகள் செய்த பின்புதான் மின்சாரம் பாய்ந்துள்ளது என்பது நடந்துள்ள நிகழ்வுகளை பார்க்கும் போது தெளிவாகத் தெரிகிறது. இச் சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக மின்சாரம் பாய்ந்த கம்பிகள், துணி களை காயவைத்த கம்பி மற்றும் பிற கம்பிகள் அனைத்தும் மற்றவர்கள் பார்ப்பதற்குள் அகற்றப்பட்டுள்ளது.
அதோடு மீட்டர் போர்டு இடம் மாற்றுவது உள்ளிட்ட மின்சாரப் பணிகள் மேற்கொள்ளும் போது கடைப்பிடிக்க வேண்டிய அடிப்ப டையான மின் பாதுகாப்பு அம்சங் கள் எதுவும் பின்பற்றபடவில்லை என்பது தெரிகிறது. மீட்டர் போர்டை இடம்மாற்றி வைக்கும் போது ஏற்கனவே உள்ள ஒயர் பழுதடைந்து உள்ளதால் தரமான பாதுகாப்பான புதிய மின் இணைப்பு ஒயர், கம்பிகள் போடா மல் ஏற்கனவே பழுதாகி பல இடங் களில் துண்டாகி இருந்த பழைய ஒயர்கள் மற்றும் கம்பிகளை இணைத்து மின் இணைப்பு கொடுக் கப்பட்டுள்ளது. இதே முறையில் தான் எஸ்டேட் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளிலும் மின் சாரப் பணிகள் மேற்கொள்ளப்பட் டுள்ளது.
இச்சம்பவங்களில் இருந்து இளம்பெண் மங்கம்மாள் உயிரிழப் பிற்கு ஆருகுச்சி பிரிவு மின்வாரியம் மற்றும் ஆலடாவேலி எஸ்டேட் நிர்வாகத்தின் பொறுப்பற்ற மற்றும் பாதுகாப்பற்ற செயல்பாடுகளே காரணம் என்பது தெளிவாகிறது. இதனால் இச்சம்பவத்தை உரிய முறையில் உயர்மட்ட அளவில் விசா ரணை நடத்த நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். மேலும் பாதிக் கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் சொந்தமாக குடியிருக்க வீடு வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பத்தை பாது காக்க வேண்டும். இவ்வாறு அம்ம னுவில் கூறப்பட்டுள்ளது.