உதகை அக்.24- கூடலூர் அருகே சாலையோரங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டி செல் பவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு நடவடிக்கை எடுக்க அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியு றுத்தியுள்ளது. இதுகுறித்து, நீலகிரி மாவட்ட ஆட்சி யருக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் லீலா வாசு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. கடந்த ஒரு வரு டமாக நகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து எடுத்துச் செல்கின்றார்கள். இச்செயலை இப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டுகிறார்கள். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக ஹெல்த் கேம்பு தபால் நிலையம் முதல் நடு கூடலூர் வரை உள்ள சாலையோரங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்வதால் இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற் படுகிறது. மேலும் இந்த இறைச்சி கழிவு களை உண்பதற்கு சிறுத்தை, பன்றி உள்ளிட்ட வன விலங்குகளும், அடிக்கடி வந்து செல்கின்றன. தெருநாய்கள் அங்கேயே சுற்றி திரிகின்றன. இதனால் இப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பொரும் சிரமத் திற்குள்ளாகின்றனர். இதேபோல், கோக்கால் மலையில் இருந்து வரும் தண்ணீர் தபால் நிலையம் முன்புறத்தில் உள்ள கால்வாய் வழியாக காஸிம் வயல் மற்றும் ஒன்றாம் மைல் வழியாக செல்கிறது. இந்த தண்ணீரை ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த கால்வாயிலும் இறைச்சி கழிவு களை கொட்டி செல்வதால் மக்கள் தண் ணீரை பயன்படுத்த முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு பொதுவெளியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டிச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு தூய்மை பாரதம் என்று அறிவித்துள்ள சூழலில் இக்கழிவுகளை கொட்டுவதற்கு தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்திட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.