tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கிட நேர்காணல்

உதகை,பிப்.13- உதகையில் மாற்றுத்திறனாளி களுக்கு இருசக்கர வாகனம் வழங் கிட நேர்காணல் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உதகை யில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி கள் அலுவலகத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங் கிட வியாழனன்று பயனாளிகள் தேர்வுக்காக நேர்காணல் நடை பெற்றது. இந்த நேர்காணலை மாற் றுத்திறனாளிகள் அலுவலர் இரா.மலர் விழி, உதகை அரசு மருத்துவமனை  எலும்பு முறிவு மருத்துவர் ஜெய்  கணேஷ் மூர்த்தி, உதகை வட்டார  போக்குவரத்து ஆய்வாளர் குலோத் துங்கன் ஆகியோர் நடத்தினர். இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராள மான மாற்றுத்திறனாளிகள் வந்திருந்த னர். அவர்கள் கூறும் போது, மாற்றுத்  திறனாளிகளுக்கான இரு சக்கர வாகனம் வெறும் ஐந்து பேருக்கு மட்டுமே வந்துள்ளது. ஆனால் இங்கு  80க்கும் மேற்பட்டோர் வந்திருக்கி றோம். பலருக்கு தகுதி இல்லை என்று  அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் எங்களுக்கு பொருள் செலவு ஏற்பட் டதுடன் மனஉளைச்சலுக்கும் ஆளா கிறோம் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர். இதுதொடர்பாக மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர் மலர்விழி கூறுகையில், 2019- 20 ஆண்டுக்காக வெறும் ஐந்து வாகனம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இரு சக்கர வாகனம் அதிக எண்ணிக் கையில் தேவை உள்ளது என்பதால்  அரசிடம் பரிந்துரைத்து கடிதம் அனுப்ப உள்ளோம். இங்கு வந்துள்ள  மாற்றுத்திறனாளிகள் இரு சக்கர வாகனம் கேட்டு மனுநீதி முகாம், முதலமைச்சர் குறைதீர்ப்பு அறை, உள்ளிட்ட பல இடங்களில் மனு அளித்துள்ளனர். அவர்கள் அனைவருமே நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மாற்று திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் பெற 75 சதவிகிதமான ஊனம்  இருக்க வேண்டும். இரண்டு கால்க ளும் ஊனம் அடைந்திருக்க வேண் டும். இரண்டு கண்கள் தெளிவாக தெரிய வேண்டும். காதுகள் நன்றாக கேட்க வேண்டும். இரண்டுகைகளும் நன்றாக இருக்க வேண்டும். மன நிலை பாதிக்கப்பட்டவராக இருக்கக் கூடாது. இவ்வாறு இருப்ப வர்கள் மட்டுமே மாற்றுத் திறனாளிக ளுக்கான இருசக்கர வாகனம்  பெற தகுதி உடையவர்கள். இதனை அறியாமல் பலரும் விண்ணப்பம் அளித்து வருகிறார்கள் என்று கூறினார்.