tamilnadu

img

தொடர் இரவுநேர பணியை 2 நாட்களாக குறைக்க கோரிக்கை

தொடர் இரவுநேர பணியை  2 நாட்களாக குறைக்க கோரிக்கை'

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த  வேண்டும். ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்து ரைப்படி அகவிலைப்படி 50 சதவீதம் உயர் விற்கு ஏற்றாற்போல், ரன்னிங் அலவன்ஸ் வழங்க வேண்டும். 29 ஆயிரம் காலிப் பணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 70 சத வீதம் ரன்னிங் அலவன்ஸ்க்கு வருமான வரி  விலக்கு வழங்க வேண்டும். தொடர் இரவுநேர பணியை இரண்டு நாட்களாக குறைக்க வேண்டும். பயணிகள்  வண்டிக்கு அதிகபட்சம் ஆறு மணி நேரமாக வும், சரக்கு வண்டிக்கு அதிகபட்சம் எட்டு  மணி நேரமாகவும் வேலை நேரத்தை குறைக்க வேண்டும். பெண் தொழிலா ளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர்கள் கழகம் சார்பில் புதனன்று நாடாளுமன்றம் நோக்கி தில்லியில் பேரணி நடைபெற்றது.  அதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சியில் அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டச்  செயலாளர் கண்ணையன் தலைமை வகித்தார். கோட்ட தலைவர்  பாக்கியராஜ், கோட்ட உதவி தலைவர் ராஜா, மண்டல செயற்குழு உறுப்பினர் ஜெயாசிரில், மண்டல அமைப்புச் செயலாளர் விஜய சங்கர் ஆகியோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர்.