tamilnadu

img

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் பலி  

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.  

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் ராணுவ அலுவலர்களுக்கான பயிற்சி கல்லூரி மற்றும் மையம் உள்ளது. இங்கு நடக்கவிருந்த ராணுவ உயர் அதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பாதையிலுள்ள நஞ்சப்பா சத்திரம் எனும் இடத்தில் கடும் மேகமூட்டம் நிலவியதால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் இதில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்ததாகவும் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்கள் தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்டதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் உரிய பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திய பிறகே விவரங்களை ராணுவம் அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.