உதகை, ஜூலை 16- குன்னூர் அரசு மருத்துவமனையில் பணி புரிந்து வரும் மருத்துவர்களின் திடீர் பணி யிட மாற்ற உத்தரவை கண்டித்து மருத்து வர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அரசு மருத்துவமனை தற்போது கொரோனா நோய் சிகிச்சை மையமாக செயல்பட்டு வரு கிறது. இந்த மருத்துவமனையில் 11 மருத்து வர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் ஒரு மருத்துவருக்கு சமீபத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட தால் அவர் கோவை இஎஸ்ஐ மருத்துவம னையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் புதனன்று மருத்துவ நிர்வா கம் காரணம் ஏதும் கூறாமல் இங்கு பணிபுரி யும் மற்ற மருத்துவர்களை திடீரென பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப் பித்தது. இந்த திடீர்பணியிட மாற் றத்தை திருப்பப்பெற வலியுறுத்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வியாழ னன்று குன்னுர் அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர்.