உதகை,பிப்.3- மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி-யை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து எல்ஐசி ஊழியர் கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட னர். எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பது என்கிற மத்திய பாஜக அரசின் பட்ஜெட் முன் மொழிவால் எல்ஐசி நிறுவ னத்தில் பணிபுரியும் ஊழி யர்கள் அதிர்ச்சி அடைந்துள் ளனர். இந்நிலையில் மத்திய அரசின் இம்முடிவை கண் டித்து நாடு முழுவதும் எல்ஐசி ஊழியர்கள் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நீல கிரி மாவட்டத்தில் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். உதகையில் உள்ள எல்ஐசி அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கிளை தலைவர் கோபால் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் தினேஷ் துவக்கி வைத்தார். எல்ஐசி வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ், எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் தர்மன், முதல்நிலை அலுவலர் சங்கத்தின் நந்தகுமார் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினார்கள். முடிவில், முதல்நிலை அதிகாரிகள் சங்கத் தின் ரிஷிகேஷ் நன்றி கூறினார். இதேபோல், குன்னூரில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கிளை தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். கிளைச் செயலா ளர் இளங்கோவன், முதல்நிலை அதிகாரி கள் சங்கத்தின் ரவி, வளர்ச்சி அதிகாரி கள் சங்கத்தின் முரளிதரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். முடிவில், எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் கோட்டத்துணைச் செயலாளர் குணசேக ரன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டங் களில் எல்ஐசி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் முகவர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டு எல்ஐசி நிறுவன பங்குகள் விற்பனை மற்றும் மத்திய பாஜக அரசின் நாசகார நடவடிக்கைகளை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.
சத்தியமங்கலம்
இதேபோல், சத்தியமங்கலம் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கத்தின் கிளை தலைவர் சிவகுமார் தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் ஊழியர் சங்கத்தின் செயலா ளர் குமார், முதல்நிலை அதிகாரிகள் சங்கத்தின் மணிகண்டன், முகவர்கள் சங்கத்தின் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட் டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.