உதகை, ஜூலை 21- தீக்கதிர் செய்தி எதிரொலியாக பந்த லூர் அருகே அரசு பள்ளியின் ஆக்கிர மிப்பு அகற்றப்பட்டு அப்பள்ளிக்கு சுற் றுச்சுவர் அமைக்க கிராம நிர்வாக அலு வலர் முன்னிலையில் நிலஅளவை செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா, நெலாக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட விலங்கூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியானது கடந்த 50 ஆண் டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகி றது. இந்தப் பள்ளிக்கு சொந்தமான நிலத்தை சில தனி நபர்கள் ஆக்கிர மித்துள்ளனர். இதனால் இந்த பள்ளி யைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆக்கிர மிப்பு செய்தவர்களிடமிருந்து நிலத்தை மீட்டு பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பள்ளி யின் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கோரிக்கை விடுத்தி ருத்திருந்தனர்.
இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இந்நிலையில், இந்த பள்ளியில் திங்களன்று பந்தலூர் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், நெலாக் கோட்டை கிராம நிர்வாக அலுவலர் ஆகி யோர் முன்னிலையில் நில அளவை செய்யப்பட்டது. அப்போது, தனிநபர் ஒருவர் பள்ளியின் நிலத்தை ஆக்கிர மித்து கட்டிடம் கட்டியுள்ளது தெரியவந் தது. இதையடுத்து பள்ளியின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட் சியர் உறுதியளித்து சென்றதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.