உதகை,பிப்.20- நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய கொரானோ வைரஸ் மற்றும் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில், கூடலூர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலபணி திட்டம், நெல்லியாளம் நகராட்சி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகள் இணைந்து கொரானா வைரஸ் மற்றும் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை புதனன்று நடத்தி னர். பந்தலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நாட்டு நலபணி திட்ட அலுவலர் சைலஜா தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரம ணியம், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், கொரனோ வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க கைகள் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மாணவர்கள் உறவினர்கள், மற்றும் நண்பர்களிடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வாழ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இதனைத்தொடர்ந்து துவங்கிய பேரணியை கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானது புதிய பேருந்து நிலை யத்தில் இருந்து துவங்கி பழைய பேருந்து நிலையம், அரசு மேல் நிலை பள்ளி, வழியாக நகராட்சி அலுவலகம் சென்றடைந்தது. தொடர்ந்து வருவாய் அலுவலர் அலுவல கம், மாரியம்மன் கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளை தூய்மை படுத்தும் பணியில் நாட்டு நலதிட்டபணி மாணவர் கள் ஈடுபட்டனர்.