உதகை, அக்.16- அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகளிர் துணைக்குழு சார்பில் உதகையில் நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகளிர் துணைகுழு சார்பில் பல் வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச் சியாக செவ்வாயன்று நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் அரசு உதவிபெறும் மன வளர்ச்சி குன்றிய சிறுவர் பள்ளிக்கு ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள மேசைகள் மற்றும் இருக்கைகள் வழங்கப்பட்டது. இதேபோல் கனமழையினால் குடியிருப்புகளை இழந்த 3 குடும்பங்களுக்கு வீடுகளை புனரமைத்திட ரூ.15 ஆயிரம் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சின்போது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டல இணைச்செயலாளர் வி.சுரேஷ், கோவை கோட்ட பொதுச்செயலாளர் கே. துளசிதாசன், உதகை கோட்ட செயலாளர் தினேஷ், விவசாய சங்க தலைவர் அலி யார்,மகளிர் அமைப்பாளர் ஜி.சுதா, சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ஆர்.பத்ரி, மின்ஊழியர் மத்திய அமைப்பின் குந்தா கோட்ட செயலாளர் முரளிதரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.