இல்லம் தோறும் வாசிப்பை நேசிக்கும் வகையில் பாரதி புத்தகாலயம் குடும்ப நூலகம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. குறிப்பாக படிக்கும் குழந்தை கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஏராளமான புத்தகத்தை தொடர்ந்து பாரதி புத்தகா லயம் வெளியிட்டு வருகிறது. அதில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையான புத்த கங்கள், அறிவியல் குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையில் சுவராஸ்யமான துணுக்கு செய்திகளை உள்ளடக்கிய புத்தங்கள் ஏராளம். கணக்கு பாடத்தை ஒரு மேஜிக் போல் கையாள்வது எப்படி என்பது போன்ற நுட்பங்களை உள்ளடக்கிய புத்தகங்களையும் வெளியிட்டு வருகிறது. அந்தந்த துறை வல்லுநர்களை கொண்டு உருவாக்கும் புத்தகங்களால் பாரதிபுத்தகாலயம் இன்று தமிழகம் முழுவதும் பரவலாக மக்களிடம் சென்றடைந் திருக்கிறது. மாணவர்களிடம் பெற்றோர்கள் படிப்பு விஷத்தில் எப்படி அணுக வேண்டும், அதே போல் ஆசிரியர்கள் மாணவர்களை எப்படி முழுமையாக புரிந்து கொண்டு வழிகாட்டுவது என்பது உள்ளிட்ட பல்வேறு புத்தகங் கள் ஆசிரியர்களையும் பாரதிபுத்தகாலயம் பக்கம் ஈர்த்திருக்கிறது. வரலாறு, கலை, இலக்கியம், கவிதை, புதினம், உலக தலைவர்களின் வாழ்க்கை வரலாறு என பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் பல்சுவை நூல்களும் புத்தக பிரியர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையிலும், ஆதா ரத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நூல்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றிருக்கும் பாரதி புத்தகாலயம் தற் போது குடும்ப நூலகம் என்ற திட்டத்தை அறிமு கப்படுத்தியிருக்கிறது. இத்திட்டத்தில் ரூ.5000 செலுத்தி இணைந்து கொண்டால், வருடந்தோறும் வாசகர்கள் விரும்பும் ரூ.1000 மதிப்பிலான புத்த கங்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். அப்படி 10 வருடங்களுக்கு ரூ 10 ஆயிரம் மதிப்பி லான புத்தங்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும் தேவைப்படுவோர் குடும்ப நூலக திட்டத்தில் இணைந்த உடனே ஆயிரம் ரூபாய்க்கான புத்த கத்தோடு ரூ.9000 ஆயிரத்திற்கான கூப்பனையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த கூப்பனை கொண்டு பாரதி புத்தகாலயத்தின் அனைத்து கிளைகளி லும் விரும்பிய புத்தகங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதே போன்று புத்தகத் திருவிழாக்களில் பாரதி புத்தகாலயத்தில் புத்தங்களை தேர்ந்தெடுத்து வாங்கி கொள்ளலாம். இதோடு சிறந்த புத்த கங்களை அறிமுகம் செய்தும், நிபுணத்துவம் பெற்ற வர்களிடம் இருந்து புத்தக விமர்சனங்களையும் உள்ளடக்கி வெளிவரும் புத்தகம் பேசுதுமாத இதழ் மாதந்தோறும் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நூலகம் உருவாகும். குழந்தைகளுடன் இணைந்து பெற்றோர்களும், பெரியோர்களும் இணைந்து வாசிக் கும் பழக்கம் உருவாகும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குடும்ப நூலகத் திட்டத்தில் இணைந்து நாமும் வாசிப்பை நேசிப்போம். - யாழினி