tamilnadu

img

ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகம் செய்த இசையமைப்பாளர் அர்ஜுனன் காலமானார்

கொச்சி:
பிரபல மலையாள திரைப்பட இசையமைப்பாளர் அர்ஜுனன் மாஸ்டர் என்கிற எம்.கே.அர்ஜுனன் (84) திங்களன்று அதிகாலை  கொச்சியில் காலமானார்.

எம்.கே.அர்ஜுனன் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு சுமார் 600 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். நாடகங்களுக்கும் இசையமைத்துள்ள இவர் 1968 இல் வெளியான "கறுத்த பவுர்ணமி" என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையிலும் அறிமுகமான எம்.கே.அர்ஜுனன் ஆரம்ப கால திரைத்துறை நண்பரான ஆர்.கே.சேகரின் மகனான ஏ.ஆர்.ரஹ்மானை 1981இல் ‘அடிமச்சங்ஙல’ (அடிமைச்சங்கிலி) என்கிற திரைப்படத்தில் கீபோர்டு கலைஞராக அறிமுகம் செய்தவர் . இதுபோல் ஏராளமானோரை திரையுலகில் அறிமுகப்படுத்தியுள்ளார்.  சிறந்த திரை இசைக்கான கேரள அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

எம்.கே.அர்ஜுனனின் இறுதி நிகழ்ச்சிகள் திங்களன்று பிற்பகல் 2 மணிக்கு கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இணங்க மிக குறைவான நபர்களின் பங்கேற்புடன் கொச்சியில் நடைபெற்றது.  

முதல்வர் இரங்கல்
அர்ஜுனன் மாஸ்டரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடகம் மற்றும் சினிமா மூலம் மலையாளிகளின் நினைவுகளில் அழியாத இசை இயக்குனர் அர்ஜுனன் மாஸ்டர் என்றும் அவரது மறைவு இசை உலகிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பெரும் இழப்பு என்றும் தெரிவித்துள்ளார்.