tamilnadu

img

தில்லியில் நடக்கும் வன்முறைகள் தலைமைத்துவத்தின் தோல்வி.. அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் கடும் சாடல்

நியூயார்க்:
இந்தியாவில் நடக்கும் வன்முறைகள்,மனித உரிமைகளும், தலைமைப்பண்பும் தோல்வி அடைந்ததற்கான அடையாளம் என்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களில் ஒருவரான பெர்னி சாண்டர்ஸ் சாடியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந் தியா வந்திருந்த போதுதான், தில்லியில் வன்முறை வெடித்தது. இதுகுறித்து டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேள்விஎழுப்பியபோது, “எனக்குத் தெரிந்தவரைசில தனிப்பட்ட தாக்குதல்கள் நடக்கின் றன; நான் அதைப்பற்றி மோடியிடம் பேசவில்லை. எனினும், இந்தியாதான் இதை கட்டுப்படுத்த வேண்டும். இந்தியா மட்டுமே இவ்விவகாரத்தில் முடிவு எடுக்க முடியும். நான் கருத்து சொல்ல முடியாது” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.டிரம்பின் இந்த பதில், அமெரிக்காவில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயக் கட்சி டிரம்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அதனடிப்படையில், ஜனநாயக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான பெர்னி சாண்டர்ஸூம், டிரம்பின் பேட்டியை கடுமையாக எதிர்த்துள்ளார். 

“இந்தியாவில் 200 மில்லியன் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதுதானே சொந்த நாடு. ஆனால் அங்கு இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. அரசு இதை தடுக்கவில்லை. அங்கு இதுவரை 27 பேர் பலியாகி உள்ளனர். பலர் மோசமாககாயம் அடைந்துள்ளனர். இந்த கலவரத்தை தடுக்க அந்நாட்டு அரசு தவறிவிட்டது. டிரம்ப்போ, இதை இந்தியாதான் கையாள வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வன்முறையும், டிரம்பின் பேச்சும்தலைமைத்துவம் தோல்வி அடைந்ததற்கான அடையாளம் ஆகும். மேலும்,மனித உரிமைகள் தோல்வி அடைந்ததற்கான அடையாளம் ஆகும்.”இவ்வாறு சாண்டர்ஸ் குறிப்பிட் டுள்ளார்.