தென்னாப்பிரிக்கா அரசின் வரலாற்றில் முதல்முறையாக 50 சதவிகித பெண் நாடாளுமன்ற அமைச்சரவை உறுப்பினர்களை அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் பெண்கள் முன்னேற்றம் அடைந்தும் மற்றும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டும் வருகின்றன. மொத்தமுள்ள 195 நாடுகளில் கனடா, கொலம்பியா, எத்தியோபியா, ஸ்வீடன், ஸ்பெயின் உள்ளிட்ட 11 நாடுகள் மட்டுமே 50 அல்லது அதற்கும் அதிகமான சதவிகித அளவிலான பெண்களை தனது நாடாளுமன்றத்தில் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த பட்டியலில் தற்போது தென்னாப்பிரிக்கா புதிதாக கால்தடம் பதித்துள்ளது.
கடந்த மே 8ம் தேதி வெளியான தென்னாப்பிரிக்காவின் நாடாளுமன்ற தேர்தல் முடிவில் அந்நாட்டின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து அமைச்சரவை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட தென்னாப்பிரிக்க குடியரசுத்தலைவர் சிரில் ரமபோசா புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் 50 சதவிகிதத்தினர் பெண்கள் என அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.