tamilnadu

img

அமெரிக்க பல்கலை.யில் தமிழ் இருக்கைக்கு ரூ. 1 கோடி நிதி

சென்னை,டிச.20- அமெரிக்காவின் ஹூஸ்டன் பல் கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் நிறுவ 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகள், பிற மாநில கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் நிறுவ ஆண்டுதோறும் ரூ. 5 கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்படும் என்று கடந்த  ஆண்டு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டது. அதன்  அடிப்படையில் ஹூஸ்டன் பல்கலைக்  கழகத்தில் இருந்து வந்த கோரிக்கை யின் பேரில் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, பொருளாதார திறனாற்றல் குறித்த ஆய்வுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்  என்பது உள்ளிட்ட நிபந்தனைகளு டன் இந்த அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.