tamilnadu

img

இந்தி திரையுலகிற்கே முன்னுரிமை தருகிறீர்கள்... தென்னிந்திய திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறோம்

புதுதில்லி:
மகாத்மா காந்தியின் 150-ஆவது  பிறந்தநாள் விழாவுக்கு தென்னிந்தியநடிகர் - நடிகையர் புறக்கணிக்கப்பட்டி ருப்பது வேதனை அளிப்பதாக, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியின் மருமகளும், நடிகர் ராம் சரணின் மனைவியுமான உபசனா காமினேனி கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் நிறைவை, பிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்களுடன் ஞாயிறன்று தில்லியில் கொண்டாடினார். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமீர் கான், ஷாரூக் கான், கங்கனாரணாவத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ராகுல் ப்ரீத்தி சிங், இயக்குநர்கள் ராஜ்குமார் ஹிரானி, ராஜ்குமார் சந்தோஷி, அஸ்வினி ஐயர் திவாரி, நிதேஷ் திவாரிமற்றும் தயாரிப்பாளர்கள் ஏக்தா கபூர், போனி கபூர் மற்றும் ஜெயந்திலால் கடா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அவர்களுடன் கலந்துரையாடல் நடத்திய பிரதமர் மோடி, குறும்படம் ஒன்றையும் வெளியிட்டார். இந்நிலையில்தான், தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபசனா காமினேனி தனது டுவிட்டர் சமூக வலைதள பக்கத்தில், பிரதமர் மோடிக்குதிறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். “இந்த நாட்டின் பிரதமராக நீங்கள்இருப்பது, தென்னிந்தியாவில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி. மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு பிரபலங்களை அழைத்ததையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், பெரிய ஆளுமைகள், கலாச்சார அடையாளங்களின் பிரதிநிதித்துவம் இந்தி நடிகர்களுக்கு மட்டுமேகொடுக்கப்படுகிறது. தென்னிந்தியசினிமா முற்றிலும் புறக்கணிக்கப்படு வதாகவே நாங்கள் உணர்கின்றோம். நான் என் உணர்வுகளை வேதனையுடன் இங்கே வெளிப்படுத்துகிறேன். எனது இந்த கருத்து சரியானது என்றும் நம்புகிறேன். ஜெய்ஹிந்த்!” என்று அந்த டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.