tamilnadu

img

ஆமாம், நான் குழம்பி விட்டேன்; என்னை விட்டு விடுங்கள்...

புதுதில்லி:
ஆட்டோமொபைல் தொழிற் துறையில் ஏற்பட்ட மந்த நிலைக்கு ஓலா, உபேர் சேவைகள்தான் காரணம் என்று கூறி, மத்திய நிதியமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சமூகவலைத்தளவாசிகளிடம் சிக்கிக் கொண்டார்.
இந்நிலையில், நிர்மலா சீதாராமனைக் காப்பாற்றுகிறேன் என்று கூறி, களத்தில் குதித்தவர் மற்றொரு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். “தொலைக்காட்சியில் காட்டப்படும் கணக்கீடுகள் வழியில் செல்ல வேண்டியதில்லை, அதாவது 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற வேண்டுமெனில் 12 சதவிகித பொருளாதார வளர்ச்சி தேவை என்ற கணக்கீடுகளை நாம் பார்க்க வேண்டியதில்லை. இத்தகைய கணிதங்கள் ஒன்றும் ஐன்ஸ்டீன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க உதவவில்லை” என்று போகிற போக்கில் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டார்.

இதையடுத்து, நிர்மலா சீதாராமனை விட்டுவிட்ட சமூகவலைத்தள வாசிகள், ‘புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது நியூட்டனா, ஐன்ஸ்டீனா? என்று பியூஷ் கோயலை பிடித்துக் கொண்டனர். பியூஷ் கோயல் எந்த பள்ளியில் படித்தார் என்று துவங்கி, அமைச்சரே இந்த லட்சணத்தில் இருந்தால், நாட்டில் விஞ்ஞானம் எப்படி வளரும்? என்றும் துளைக்க ஆரம்பித்தனர். இந்த சமூகவலைத்தள தாக்குதலை தாங்க முடியாமல் திணறிப்போன பியூஷ் கோயல், “ஆமாம்.. ஐன்ஸ்டீன் பற்றி நான் பேசும்போது தவறுதலாக வாய் தவறிப் பேசிவிட்டேன்; நான் தவறு செய்ததை பொது வெளியில் ஒப்புக் கொள்கிறேன்” என்று இரண்டு கைகளையும் உயர்த்தி சரண்டர் ஆகியுள்ளார்.“ஒரு கருத்தை உணர்த்துவதற்காக நான் பேசியது கடைசியில் தவறாகி விட்டது. எதை உணர்த்த விரும்பினேனோ, அதற்குப் பதிலாக எனது தவறு தான் பெரிதாகி விட்டது” என்றும் புலம்பியுள்ளார்.