tamilnadu

img

ரூபாய் மதிப்பு 15 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி

தொடர்ந்து அடிவாங்கும் பங்குச் சந்தைகள், ஜிடிபி வீழ்ச்சி, பொருளாதார மந்தம் ஆகியவற்றின் காரணமாக, அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் மிகக் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. செவ்வாயன்று காலை, ரூபாயின் மதிப்பு 72 ரூபாய் 22 காசுகளாக இருந்தது.  இது மாலையில் 73 ரூபாய் 30 காசுகளாக வீழ்ச்சி கண்டது. கடைசியாக 2018 நவம்பர் 12 அன்றுதான், ரூபாய் மதிப்பு இந்த அளவிற்கு மோசமாக வீழ்ச்சியைச் சந்தித்து இருந்தது. தற்போது 15 மாதங்களுக்குப் பிறகு 73 ரூபாயைத் தாண்டியுள்ளது. புதன்கிழமையன்றும் ரூபாய் மதிப்பில் பெரிய முன்னேற்றம் எதுவுமில்லை. 73 ரூபாய் 20 காசுகளாக இருந்தது.