tamilnadu

img

உலக கொரோனா பாதிப்பு அட்டவணை...  8-வது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம்...   

மும்பை 
நாட்டின் கொரோனா மையமாக உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி பாதிப்பு 8 ஆயிரத்து மேல் உள்ள நிலையில், மொத்த பாதிப்பு 3.57 லட்சமாக உள்ளது. 13,132 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 1.99 லட்சம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில், உலகளவிலான கொரோனா பாதிப்பு அட்டவணையில் மகாராஷ்டிரா மாநிலம் 8-வது இடத்தில் உள்ளது. அதாவது உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் உள்ளது. 

உலக கொரோனா பாதிப்பு அட்டவணையில் உள்ள டாப் 10 நாடுகள் 

1. அமெரிக்கா  -  42.48 லட்சம் 

2. பிரேசில்  - 23.48 லட்சம் 

\3. இந்தியா  - 13.42 லட்சம் 

4.ரஷ்யா  - 8.06 லட்சம் 

5. தென் ஆப்பிரிக்கா  - 4.21 லட்சம் 

6. மெக்ஸிகோ - 3.78 லட்சம் 

7. பெரு  - 3.75 லட்சம் 

8. மகாராஷ்டிரா  - 3.57 லட்சம் (இந்தியா)

9. சிலி - 3.41 லட்சம் 

10. பிரிட்டன் 2.97 லட்சம் 

எனினும் ஒரு வித்தியாசம் உள்ளது. உலகில் உள்ள பல நாடுகளை விட மகாராஷ்டிரா மாநிலத்தின் பரப்பளவு சற்று மிகப்பெரியது என்பதால் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது என மனதை தேற்றிக்கொள்ளலாம்.