tamilnadu

img

தேசிய எலக்ட்ரானிக்ஸ் கழகத்தில் வேலை

புதுதில்லியிலுள்ள National Institute of Electronics and Information Technology-ல் உள்ள 328 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. பணியின் பெயர்: IT Training & Support Executive
காலியிடங்கள்: 30
சம்பள விகிதம்: ரூ.44,900

2. பணியின் பெயர்: Programmer Assistant ‘B’
காலியிடங்கள்: 30
சம்பள விகிதம்: ரூ.21,634 - 27,800

3. பணியின் பெயர்: IT Manager
காலியிடங்கள்: 3
சம்பள விகிதம்: ரூ.49,500

4. பணியின் பெயர்: Sr.Programmer
காலியிடங்கள்: 120
சம்பளவிகிதம்: ரூ.38,500

5. பணியின் பெயர்: Sr.Programmer Kol
காலியிடங்கள்: 15
சம்பளவிகிதம்: ரூ.38,500

6. பணியின் பெயர்: System Analyst
காலியிடங்கள்: 6
சம்பளவிகிதம்: ரூ.49,500

7. பணியின் பெயர்: Assistant Programmer ‘B’
காலியிடங்கள்: 80
சம்பள விகிதம்: ரூ.20,900

8. பணியின் பெயர்: Assistant Programmer ‘B’
காலியிடங்கள்: 20
சம்பள விகிதம்: ரூ.20,900

9. பணியின் பெயர்: Programmer
காலியிடங்கள்: 15
சம்பள விகிதம்: ரூ.33,000

10. பணியின் பெயர்: Project/ Team Head
காலியிடங்கள்: 3
சம்பளவிகிதம்: ரூ.1,10,000

11. பணியின் பெயர்: Network Specialists
காலியிடங்கள்: 6
சம்பள விகிதம்: ரூ.38,500

மேற்கண்ட அனைத்து பணிகளுக்குமான கல்வித்தகுதி: Computer Science/ Information Technology/ Electronics/ Electronics & Communication/ Electronics & Electrical/ Electronics & Tele Communication/ Electronics & Instrument போன்ற பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் BE/ B.Tech./ M.Sc./ MCA போன்ற பட்டப் படிப்புகள் ஏதேனும் ஒன்றை முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.600. (SC/ ST/ PWD/ பெண்கள் பிரிவினர்களுக்கு ரூ.300). இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.nielit.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 16.12.2019.