புதுச்சேரி, மார்ச் 2- மத்திய பாஜக அரசு தாக்கல் செய் துள்ள மத்திய பட்ஜெட்டில் புதிய வேலை வாய்ப்பை உருவாக்க எந்தவித அறி விப்பும் இல்லாததை கண்டித்தும், தொழி லாளர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் எந்தவித வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்க முன்வராததை கண்டித்தும் சிஐ டியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் தலைமை தபால் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஏஐடியுசி மாநிலத் தலைவர் அபிஷேகம் தலைமை தாங்கினார். சிஐடியு பிரதேசத் தலைவர் கே.முருகன், செயலாளர் சீனு வாசன், பொருளாளர் பிரபுராஜ், ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் சேது செல்வம், நிர்வாகிகள் தினேஷ் பொன்னையா, துரை செல்வம், ஐஎன்டியுசி மாநில நிர்வாகிகள் ஞானசேகரன்,த சொக்கலிங்கம், ரவிச் சந்திரன், ஏஐசிசிடியூ நிர்வாகிகள் பழனி, பாஸ்கர், அருள், எல்எல்எப் சங்கத்தின் நிர்வாகிகள் கலைவண்ணன், தங்க கதிர்வேல், செந்தில் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய பாஜக அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் முழக்க மிட்டனர்.