tamilnadu

img

கங்கை ஆற்றுத் தண்ணீர் கொரோனாவை குணப்படுத்துமா? கடுப்பான மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்

புதுதில்லி:
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது பற்றி, உலக சுகாதார நிறுவனமும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவக் குழுவினரும் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அனைத்தும் பரிசோதனை கட்டத்திலேயே இருக்கின்றன.

இந்நிலையில், “கோவிட் -19 ஐ குணப் படுத்தக்கூடிய ‘பாக்டீரியோபேஜ்’ எனப்படும் ‘நிஞ்ஜா வைரஸ்’ கங்கையின் நீரில் (கங்காஜல்) இருப்பதாகவும், இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை சாப்பிட்டு விடும் என்பதால், கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று ‘அதுல்யா கங்கா’ என்ற நிறுவனம், புதியகதை ஒன்றை அவிழ்த்து விட்டுள்ளது.கொரோனா தடுப்பு மருந்துக்கான ‘கங்காஜல்’ என்றழைப்படும் நீர், கங்கை நதிக்கரையை ஒட்டிய கங்கோத்ரியில் இருந்தும், புனித ஸ்தலமான ரிஷிகேஷில் இருந்தும் சேகரிக்கப் படுவதாகவும் கூறியுள்ளது.இந்த தகவலை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் படித்துப் பார்த்ததோ, இல்லையோ அதனைதீவிரமாக எடுத்துக் கொண்டு, ‘அதுல்யா கங்கா’ நிறுவனம் கூறியிருப்பது பற்றி ஆராய்ச்சி செய்யவேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்திற்கு (Indian Council of Medical Research - ICMR)அண்மையில் பரிந்துரை ஒன்றை செய்துள்ளது.

இதனைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா? என்று தெரியாத மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது, கொரோனாவுக்கு ‘உண்மையாகவே’ மருந்துகண்டுபிடிக்கும் ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருக்கிறோம், தயவுசெய்து இடையூறுசெய்ய வேண்டாம் என்ற ரீதியில் பதிலளித்துள்ளது. ஜல்சக்தி அமைச்சகத்தின் கோரிக்கையைஏற்க முடியாது என்றும் முகத்தில் அடித்தாற் போல கூறியுள்ளது.கங்கை நீர் குடிக்க அல்ல; குளிக்கவே லாயக்கற்றது என்று மாசுக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் கூறியிருக்கும் நிலையில், மத்திய பாஜக அரசு அந்த தண்ணீரில், பாக்டீரியா பேக்கேஜ் இருக்கிறது; கொரோனா மருந்து தயா
ரிக்கலாம் என்று கூறியிருப்பது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.