புதுதில்லி:
தில்லியின் வடகிழக்குப் பகுதியில் நடந்தது அப்பட்டமான ‘இனப்படுகொலை’ என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி எம்.பி. கூறியுள்ளார்.தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் இதுதொடர்பாக ஓவைசி மேலும் பேசியிருப்பதாவது:
“தில்லியில் 40-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிரதமர் தங்கியிருக்கும் பகுதியில் இருந்து சற்று தொலைவில்தான் வன்முறைகள் அரங்கேறியுள்ளன. அவ்வாறிருக்கையில், வன்முறையைப் பற்றி ஏன் அவர் இன்னும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை? பாதிக்கப்பட்ட ஷிவ் விஹார் பகுதிக்கு பிரதமர் செல்ல வேண்டும். ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இந்தியர்கள்.அதேபோல, “நிதிஷ்குமார், ராம்விலாஸ் பாஸ்வான், அகாலிதளத்தைச் சேர்ந்தவர்களைக் கேட்கிறேன்.. எதற்காக அமைதியாக இருக்கிறீர்கள்? அகாலிதளம் கட்சி 1984-இல் நடந்த வன்முறையை மறந்துவிட்டதா?.”இவ்வாறு ஓவைசி பேசியுள்ளார்.