tamilnadu

img

மோடி, அமித்ஷா மவுனம் ஏன்?

புதுதில்லி, ஜன. 17 - காஷ்மீரில் பயங்கர வாதிகளுக்கு உதவிய தாக டிஎஸ்பி தேவிந்தர் சிங் கைது செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியப் பாது காப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் அமைதியாக இருப்பது ஏன்? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். புல்வாமா தாக்குதலில், தேவிந்தர் சிங்கின் பங்கு என்ன? இன்னும் எத்தனை பயங்கரவாதிகளுக்கு அவர் உதவி செய்துள் ளார்? அவரை யார் பாதுகாத்தது - எதற்காக பாதுகாத்தனர்? என்றும் ராகுல் கேட்டுள்ளார்.