புதுதில்லி:
பாஜக அரசிடம் ஏழைகளுக்குக் கொடுக்கப் பணமில்லை, ஆனால் ஆட்சி களைக் கவிழ்ப்பதற்கு பாஜக-விடம் பணம் உள்ளதா? என்று காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
கொரோனா பெருந்தொற்றினால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் பலியாகின்றனர்.நாட்டின் மருத்துவ உட்கட்டமைப்புகள் வீழ்ந்து வருகின்றன. கொரோனா பதற் றம் மக்களுக்கு அதிகரித்துள்ளது. ஆனால், மத்திய பாஜக அரசோ, ஜனநாயக ரீதியாக தேர்வு செய்த அரசுகளைக் கலைப்பதிலேயே மும்முரம் காட்டி வருகிறது. முதலில் கர்நாடகா, பின்னர் மத்தியப் பிரதேசம் தற்போது ராஜஸ்தான் என்று, பாஜக-வினர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக்கவிழ்ப்பதிலேயே குறியாக உள்ளனர்.ஏழைகளுக்குக் கொடுக்க மத்தியபாஜக அரசிடம் பணம் இல்லை;கொரோனா சுகாதாரப் பணியாளர் களுக்கு தரமான பாதுகாப்புக் கருவிகளை வழங்கவும், பாவம் அவர்களிடம் பணம் இல்லை, ஆனால் ஜனநாயகரீதியாக தேர்வு செய்த ஆட்சியைக் கவிழ்க்க மட்டும் பாஜக-விடம் ஏராளமாக பணம் உள்ளது. எங்கிருந்து வருகிறது இந்தப் பணம்?இவ்வாறு வேணுகோபால் கேள்விஎழுப்பியுள்ளார்.