tamilnadu

img

ஊரடங்கிற்குப் பின்னால் என்ன நடக்கும்?

சோனியா, மன்மோகன் கேள்வி

புதுதில்லி, மே 6- ஊரடங்கு தொடரும் என்பதைத் தீர் மானிக்க அரசாங்கம் என்ன அளவு கோல்களைப் பயன்படுத்துகிறது என் பதை அறிய விரும்புவதாக சோனியா காந்தி கூறியுள்ளார்.  காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநி லங்களின் முதல்வர்கள் பங்கேற்ற காணொலி கூட்டத்தில் பேசிய அவர், மே 17-க்குப் பிறகு அரசு என்ன செய்யப் போகிறது; மே 17-க்குப் பிந்தைய நிலை எப்படி; ஊரடங்கு எவ்வளவு காலம் தொடர வேண்டும் என்பதை தீர்மானிக்க அரசாங்கம் என்ன அளவுகோல்களைப் பயன்படுத்துகிறது என்று கேள்வி எழுப் பினார். சோனியா எழுப்பிய இதே கேள்வியை முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங்கும் எழுப்பினார்.

முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் குறித்து சோனியா காந்தி தமது கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கலந்துரையாடினார். தொற்றுநோயைக் கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசுகள் எடுத் துள்ள நடவடிக்கைகளை ஆய்வு செய் தார். குறிப்பாக இந்தக் கூட்டத்தில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பல் வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் பிரச்சனை பற்றியும், அவர்களை மீண்டும் தங்கள் ஊர் களுக்கு அழைத்து வருவதில் மாநி லங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்க ளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் ஊர்களுக்கு திரும்பிச் செல்வ தற்கான கட்டணத்தை காங்கிரஸ் செலு த்தும் எனக் கூறிய சோனியாகாந்தி, ரயி லில் பயணம் செய்வதற்கு மத்திய அரசு கட்டணம் வசூலிப்பதை அவர் கடுமை யாக விமர்சித்தார். காங்கிரஸ் தலைவர், பிரதமர் நரேந் திர மோடிக்கு மார்ச் 23-ஆம் தேதி முதல், ஏழு கடிதங்களை எழுதியுள்ளார். குறிப் பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எதிர்கால வாழ்க்கை குறித்து அதில் சில கேள்விகளையெழுப்பி அதற்கான தீர்வையும் குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா வைரஸ் நெருக்கடியிலி ருந்து எழும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க மன்மோகன் சிங் தலைமையில் பதினொரு உறுப்பினர் களைக் கொண்ட ஆலோசனைக் குழு வையும் சோனியா காந்தி உருவாக்கி யுள்ளார்.