tamilnadu

img

பாரத் பெட்ரோலியத்தை விற்றே தீருவோம்...

புதுதில்லி:
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைதனியாருக்கு விற்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (Bharat Petroleum Corporation Ltd- BPCL)இந்தியாவிலேயே மிகப்பெரிய எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனமாகும். லாபமீட்டும் நிறுவனமாகவும் இது உள்ளது.

ஆனால், இந்த நிறுவனத்தை தனியார் பெருமுதலாளிகளுக்கு விற்கும் முடிவை ஏற்கெனவே மத்திய அரசு எடுத்து விட்டது.இதனிடையே, சர்வதேச சந்தையில்கச்சா எண்ணெய் விலை சரிந்து, லாபம்மேலும் பன்மடங்கு அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ள சூழலிலும், பாரத்பெட்ரோலியம் நிறுவனத்தை தனியார் மயம் ஆக்கத்தான் வேண்டுமா? என்றுஅண்மையில் வலுவான கேள்விகள் எழுந்தன.இதற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தற்போது பதிலளித்துள்ளார். அதில், “பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், எங்களது முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. எண்ணெய் சந்தைப் படுத்துதல் தொழிலை விட்டு வெளியேற வேண்டுமென்பதில் மத்திய அரசுமிக மிக உறுதியாக இருக்கிறது” என்றுகூறியுள்ளார்.

மேலும், “பாரத் பெட்ரோலியம் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். இந்நிறுவனத்தை எப்போது விற்பனை செய்வது என்பது குறித்து நானும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஆலோசித்து வருகிறோம். சந்தை நிலவரத் திற்கு ஏற்ப முடிவெடுப்போம்; ஆனால்,பாரத் பெட்ரோலியம் விற்கப்படுவது மட்டும் உறுதி” என்று பிரதான் குறிப் பிட்டுள்ளார்.பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின்ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ. 85 ஆயிரத்து 316 கோடியாகும். அதில் அரசின் பங்கு சுமார் ரூ. 45 ஆயிரத்து 200 கோடி. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு மும்பை, கொச்சி, பினா (மத்தியப் பிரதேசம்), நுமாலிகர் (அசாம்)ஆகிய நான்கு இடங்களில் சுத்திகரிப்புஆலைகள் இருக்கின்றன. இவைதவிர நாடு முழுவதும் 16 ஆயிரத்து 309 பெட்ரோல் நிலையங்கள், 6 ஆயிரத்து 113 எல்பிஜி விநியோக ஏஜென்சிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.