tamilnadu

img

‘துக்டே துக்டே கேங்’ பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது...

புதுதில்லி, ஜன.21- ஜே.என்.யு-வில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முக மூடி அணிந்த மர்ம நபர்கள் மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக தில்லியில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், “நான் ஜே.என்.யு-வில் படிக்கும் போது ‘துக்டே துக்டே கேங்- குகள்’ (Tukde Tukde Gang) இல்லை” என்று கூறினார். அதற்கு முன்னதாக, தில்லியில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி நடைபெற்ற பேரணி ஒன்றில் பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா வும், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நாடு தழுவிய போராட்டங்களுக்கு ‘துக்டே துக்டே கேங்’-கு கள்தான் காரணம்” என குறிப்பிட்டிருந்தார். இவற்றைக் குறிப்பிட்டு, “உள்துறை அமைச்சரும், வெளியுறவுத்துறை அமைச்ச ரும் அடிக்கடி ‘துக்டே துக்டே கேங்’ எனும் சொல்லாடலை பயன்படுத்துவது ஏன்? ” என்று சமூக ஆர்வலர் சாகேத் கோக்லே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.  இந்நிலையில், சாகேத் கோக்லேவுக்கு மத்திய உள் துறை அமைச்சகம் அளித் துள்ள பதிலில், “தங்களிடம் ‘துக்டே துக்டே கேங்’ தொடர்பான எந்தத் தகவ லும் இல்லை” என்று கூறி நழு வியுள்ளது. இந்தப் பதிலை தன்னு டைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சாகேத், “துக்டே துக்டே கேங் அதி காரப்பூர்வமாக இல்லை; அது அமித் ஷாவினுடைய கற்பனையின் உருவம் மட்டுமே” என்று கிண்டலடித் துள்ளார்.