புதுதில்லி, ஆக. 2- குடியுரிமை திருத்தச் சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று ஆறு மாத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில், விதிகளை உருவாக்க உள்துறை அமைச்சகம் 3 மாத கால அவகாசம் கேட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் குடி யுரிமை திருத்தச் சட்டத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வரும் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தது. இது மதச் சிறுபான்மையினர் இலங்கை தமிழர்களுக்கு எதிரான மசோதா என்று நாடு முழுவதும் போரா ட்டம் நடைபெற்றது. என்றாலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்பின் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிய தால் சட்டமானது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதில் இருந்து ஆறு மாதத்திற்குள் அதற்கான விதிகள் உரு வாக்கப்பட்டு உள்துறை அமைச்சகம் மூலம் அந்த துறையின் நிலைக்குழு விற்கு அனுப்பட வேண்டும். ஆனால் தற் போது வரை விதிகள் உருவாக்கப்பட வில்லை. இதனால் உள்துறை அமைச்சகம் சார்பில் மூன்று மாதங்கள் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.