சாத்தூர்:
சாத்தூர் அருகே உள்ளது படந்தால்,குருலிங்காபுரம், மேட்டமலை, பி.டி.ஓ.காலனி, முத்தால்நாயக்கன்பட்டி ஆகியவை ஆகும். இங்கு சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பெரும்பாலும், பட்டாசு, தீப்பெட்டித் தொழிலை நம்பியே ஏராளமான குடும்பங்கள் உள்ளன.
இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், சுய உதவிக்குழுக்கள் என்ற பெயரில் நுண் நிதி நிறுவனங்களின் பிடியில் சிக்கியுள்ளனர். இங்கு, கிராம விடியல்,இதயம், ஆசீர்வாதம், கிராமிய கூட்டா,பாஜாஜி, எக்குடாஸ் உள்ளிட்ட 15 நுண்நிதி நிறுவனங்கள் சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு கடன் வழங்கியுள்ளனர். விபரம் அறியாத பெண்கள், இந்த நுண்நிதி நிறுவனங்களிடம் சிக்கித் தவித்து வருகின்றனர். ஒரே நபர் இரண்டு முதல் நான்குகுழுக்கள் வரையில் கடன் பெற்றுள்ளனர். கொரோனா பொது முடக்கத்தால்இவர்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ளனர். கடன் வழங்கிய நுண்நிதி நிறுவனத்தினர், வாங்கிய பணத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும் என நிர்ந் பந்தம் செய்தனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளி மனோபிரியா கூறுகையில், “எனது கணவர் பட்டாசு ஆலையில் வேலை செய்கிறார். மூன்று குழுக்களில் கடன்வாங்கியுள்ளோம். ஒரு வாரத்திற்கு ரூ.1,200 வட்டியுடன் செலுத்தி வருகிறேன். பொது முடக்கத்தால் கணவருக்கு வேலையில்லை. வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை. மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர், வாங்கியகடனை கட்டாவிட்டால், காவல்துறையில் புகார் செய்வோம் என மிரட்டினர்.
இதுகுறித்து வாலிபர் சங்கத்திடம் தெரிவித்தோம் என்றார்.
பட்டாசுத் தொழிலாளி கருப்பசாமி கூறுகையில், மூலப் பொருட்கள் கிடைப்பதில்லை. போக்குவரத்து முழுமையாக இயங்கவில்லை. பட்டாசு ஆலைகளில் வாரம் இரண்டு அல்லதுமூன்று நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது. இதனால் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை. ஆனால், நுண் நிதி நிறுவனத்தினர் பிச்சை எடுத்து வாங்கியாவதுகடனை கட்டு என கீழ்த் தரமாக பேசினர் என்றார்.இதையடுத்து, இந்திய ஜனநாயகவாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், பாதிக்கப்பட்ட பெண்களைத் திரட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன், காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் 15 நுண் நிதி நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் மாதர்சங்க மாநில செயலாளர் எஸ்.லட்சுமி,மாவட்டச் செயலாளர் எஸ்.தெய் வானை, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ஏ.ஜெயந்தி, ஒன்றியத் தலைவர் கருப்பசாமி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆகஸ்ட் மாதம் முடியும்வரை கடன்களை வட்டியுடன் கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது. பணம் செலுத்தாத மாதங்களுக்கும் சேர்த்து கூட்டு வட்டி கேட்க கூடாது என ஒப்பந்தம் போடப்பட்டது.