tamilnadu

கடன் தவணையைக் கட்ட நிர்பந்திக்கும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக - பொதுமக்கள் வலியுறுத்தல்

தருமபுரி, ஜூன் 21- ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி கடன் தவ னையைக் கட்டச்சொல்லி நிர்பந்திக்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய, மாநில அரசு கள்  ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதனால் அனைத்து தரப்பு மக்களும் தங் களது அன்றாட வேலைவாய்ப்பினை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ள னர். மேலும், மத்திய ரிசர்வ் வங்கி பொது மக்கள் செலுத்த வேண்டிய கடன் தவ னையை ஆகஸ்ட் மாதம் வரை வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டது.  

இந்நிலையில், இந்தப் பொதுமுடக்கத் தால் ஏழை மற்றும் நடுத்தரமக்கள் வாழ வரு வாயின்றி தவித்து வரும் இந்த சூழலில் வாங் கிய கடனை திருப்பி கட்டச்சொல்லி தனி யார் நிதிநிறுவனங்கள், சுய உதவிக்கு ழுக்கள் தொடர்ந்து மிரட்டி வருகிறதென பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி தொடர்ந்து கடனைக் கட்டசொல்லி வற் புறுத்தும் வங்கிகள், நிதிநிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.  பொள்ளாச்சி இதேபோல், கோவை மாவட்டம் பொள் ளாச்சியை அடுத்த ஆனைமலை, ஆழியார், வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை உள் ளிட்ட கிராமப்புற மற்றும் மலைவாழ் கிரா மங்களில் நுண்நிதி நிறுவனங்கள் மிரட்டி கட்டாய வசூலில் ஈடுபட்டு வருவதாக அப்ப குதிமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இதுபோன்ற கட்டாய வசூலில் ஈடுபடு வோர் மீது தமிழக அரசு உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.