புதுதில்லி:
இந்தியாவின் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடியை சுருட்டிக்கொண்டு வெளிநாடு தப்பியவர் மல்லையா. ‘யுனைடெட் ஸ்பிரிட்’ என்ற சாராய ஆலையின் முதலாளியான அவரை, அடுத்த மாதம் கைது செய்து விடுவோம். இந்த வாரம்இந்தியா கொண்டுவந்து விடுவோம் என்றுமோடி அரசு கடந்த 3 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டு இருக்கிறது. ஆனால் எதுவும் நடக்கவில்லை.
அந்த வகையில், இரண்டு நாட்களுக்கு முன்பும் திடீரென ‘மல்லையா இந்தியா கொண்டுவரப்படுவது உறுதியாகிவிட்டது என்று தகவல்கள் பரவின.அதிகாரிகள், மல்லையாவை விமானத்தில் ஏற்றிக்கொண்டு, விடியற்காலை யில் இந்தியா வந்து இறங்கிவிடுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவும் நடக்கவில்லை.இதுகுறித்து மத்திய அரசு அதி காரிகள் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர்.“இந்தியா கொண்டு செல்லப்படு வதை எதிர்த்து, மல்லையா தொடர்ந்த மனு கடந்த மாதம் லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும், இங்கிலாந்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய முடியும். இந்த விவகாரத்தில் சட்டச் சிக்கல்கள் முழுவதுமாக தீர்க்கப்படவில்லை. அவைமுடிக்கப்பட்டால் மட்டுமே மல்லையா வை இந்தியா கொண்டுவருவது சாத்திய மாகும்” என்று தெரிவித்துள்ளனர்.இங்கிலாந்தின் வெளியேற்ற சட்டத்தின்படி, ஒருவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என உயர்அல்லது உச்சநீதிமன்றம் உத்தர விட்டால் அவர் 28 நாட்களுக்குள் வெளியேற்றப்பட வேண்டும். ஆனால், அதே நபர் புகலிடம் கேட்டு அகதி என்ற அடிப்படையில் விண்ணப்பித்திருந்தால், அந்த விண்ணப்பத்தின் மீது இறுதி முடிவுஎடுக்கப்பட்டால் மட்டுமே அவரை நாட்டை விட்டு வெளியேற்ற முடியும்.
இந்நிலையில், மல்லையா இங்கிலாந்து உச்சநீதிமன்றத்திற்கு சென்றி ருக்கிறாரா, தன்னை அகதி என்று கூறிபுகலிடம் கேட்டிருக்கிறாரா என்ற விபரங்கள் முழுமையாக தெரிய வில்லை. மல்லையாவின் வழக்கறிஞ ரும் அதைத் தெரிவிக்க மறுத்துள்ளார்.