tamilnadu

img

வருண்காந்தியும் முஸ்லிம்களை மிரட்டுகிறார்

புதுதில்லி:

சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மேனகா காந்தி, இஸ்லாமியர்கள் தனக்கு வாக்களிக்காவிட்டால், அப்புறம் நடக்கும் விஷயங்களுக்கு என்னை குற்றம் சொல்லக்கூடாது என்று மிரட்டியிருந்தார்.

இந்நிலையில், பிலிபிட் தொகுதியில் போட்டியிடும் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தியும் இஸ்லாமியர்களை மறைமுகமாக மிரட்டியுள்ளார். முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்காவிட்டாலும் நான் வெற்றிபெறுவேன்; அதற்காக முஸ்லிம்கள் என்னிடம் உதவிகேட்டு வரக்கூடாது என்று கூறமாட்டேன் என்று கூறியுள்ளார்.