tamilnadu

img

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு பொய்யர்....கறுப்பர்கள் மீதான வன்முறையையும் புனிதப்படுத்துகிறார்

வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடாவடியான பேச்சுக்களுக்கும், மோசமான நடந்தைகளுக்கும் பெயர் போனவர். அவரது பொய்களும் பிரசித்திபெற்றவை.

“எல்லை விவகாரத்தில் சீனா மீது, பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்று அவரிடம் பேசியபோது தெரிந்து கொண்டேன்” என்று டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு கூறினார். ஆனால், “கடந்த ஏப்ரல் மாதத்துக் குப்பின் பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பும் பேசிக்கொள்ளவே இல்லை” என்று இந்திய வெளியுறவுத் துறை அவசர அவசரமாக டிரம்ப் தகவலை மறுத்தது.இதற்கு முன்பு, பாகிஸ்தான் உடனான காஷ்மீர் விவகாரத்திலும், இதேபோல ‘தன்னை தலையிட்டு தீர்த்து வைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்’ என்று டிரம்ப் கூற, அப்போதும் ‘தான் அப்படி வேண்டுகோள் எதையும் வைக்கவில்லை’ என்று மோடி பின்வாங்கினார்.இதற்கிடையேதான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட, இரண்டு பதிவுகளை பொய்யானதகவல்கள் என்று டுவிட்டர் நிறுவனம்முகத்தில் அடித்தாற்போல் கூறியிருக்கிறது. 

டிரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரண்டு அடுத்தடுத்த டுவீட்களை போட்டிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலைமையமாகக் கொண்ட அந்த டுவீட்களில், “மெயில்-இன் வாக்குச்சீட்டுகள் மோசடிக்கு வழிவகுக்கும்” என்றும்,“அஞ்சல் பெட்டிகள் கொள்ளையடிக்கப் படும், போலியான வாக்குச்சீட்டுகள் சட்டவிரோதமாக அச்சிடப்பட்டு மோசடியாககையொப்பமிடப்படும்; கலிபோர்னியா ஆளுநர் மில்லியன் கணக்கான மக்களுக்கு வாக்குச்சீட்டை அனுப்புகிறார்” என்று கூறியிருந்தார்.டிரம்பின் இந்த 2 டுவீட்-களையும் “பொய்யான தகவல்களைக் கொண்டது” என்று டுவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது.‘மெயில்-இன் பேலட்’ குறித்து டிரம் பின் அறிக்கைகள் மக்களைத் “தவறாக வழிநடத்தும்” என்று கூறி, அந்த 2 டுவீட்களையும் பொய் டுவீட் என்று டுவிட்டர் அடையாளப்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிலாய்டு என்ற காவலாளி, நிறவெறியால் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக அங்கு போராட்டம் வெடித்துள்ள நிலையில், இவ்வாறு போராட்டம் நடத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என்று, அடுத்து ஒரு பதிவை டிரம்ப் வெளியிட்டிருந்தார்.இதனையும், “டிரம்பின் பதிவு, டுவிட்டரின் நெறிமுறைகளை மீறி வன்முறையை புனிதப்படுத்துவது போல இருக்கிறது” என டுவிட்டர் நிறுவனம் சாடியுள்ளது.