tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டம் உச்சநீதிமன்றத்தில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் மனு

புதுதில்லி, மார்ச் 3-  குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர் பாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.  எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத் திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றியது. இதனைக் கண்டித்தும் இச்சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும் நாடு முழுவதும் மாணவர்கள் ,இளைஞர்கள், பொதுமக் கள் மற்றும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஐநா மனித உரிமை கள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது.  அந்த மனுவில், நீதிமன்றத்திற்கு உதவு வதற்காக தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேப ணையை தெரிவித்துள்ளது.