புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வியாழன் மாலை புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. இந்த அமைச்சரவையில் மோடியையும் சேர்த்து மொத்தம் 58 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர்.
புதிய அமைச்சரவையில் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அதிகபட்சமாக 9 மந்திரிகள் பதவி கிடைத்துள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து 8 பேர் மத்திய இடம் பெற்றுள்ளனர்.மத்தியப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் இருந்து தலா 5 பேர் மத்திய இடம் பெற்றுள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் 4 பேர், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் தலா 3 பேர், மேற்குவங்கம், பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்தவர்கள் தலா 2 பேர் இடம் பெற்றுள்ளனர்.
கோவா, தெலுங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர், அருணாசலபிரதேசம், அசாம், உத்தரகண்ட், இமாச்சலபிரதேசம், காஷ்மீர், தில்லியை சேர்ந்தவர்கள் தலா ஒருவர் இடம் பிடித்துள்ளனர்.மத்திய மந்திரிகளுக்கு எந்தெந்த துறைகளை ஒதுக்குவது என்பது குறித்து வெள்ளி காலை முதல் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதையடுத்து மதியம் புதிய அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த முறை பிரதமருக்கு அடுத்த நிலையில் 2-வது இடத்தில் உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத்சிங் பாதுகாப்பு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாஜக தலைவர் அமித்ஷா முதல் முறையாக மத்திய அமைச்சராகியுள்ளார். அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார்.நேற்றுவரை மத்திய அரசின் வெளியுறவுத்துறைச் செயலாளராக இருந்து, ஓய்வுபெற்று, மோடி அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சராகி உள்ளார். கேரளாவைச் சேர்ந்த முரளிதரன் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக உள்ளார். அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகாக்கள் விவரம் வருமாறு:-
கேபினட் அமைச்சர்கள்
பிரதமர் மோடி- அணுசக்தி, விண்வெளி, பொதுநலம், பென்ஷன், கொள்கை முடிவுகள் மற்றும் இதுவரை ஒதுக்கப்படாத அமைச்சரவை இலாகாக்கள்.
1. ராஜ்நாத் சிங்- பாதுகாப்பு
2. அமித்ஷா-உள்துறை
3. நிதின் கட்காரி-சாலை போக்குவத்து, நெடுஞ்சாலைத்துறை, சிறுகுறு நடுத்தர தொழில்.
4. சதானந்த கவுடா- ரசாயனம் மற்றும் உரம்
5. நிர்மலா சீதாராமன்-நிதி மற்றும் கம்பெனி விவகாரம்
6. ராம்விலாஸ் பஸ்வான்- உணவு, பொது விநியோகம், நுகர்வோர் விவகாரம்.
7. நரேந்திர சிங் தோமர்- வேளாண், விவசாயிகள் நலன், ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ்.
8. ரவிசங்கர் பிரசாத்- சட்டம், தகவல் தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம்
9. ஹர்சிம்ரத் கவுர் பாதல் - உணவு பதப்படுத்தும் தொழில்
10. தாவர் சந்த் கெலாட் - சமூக நீதி
11. ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை
12. ரமேஷ் பொக்ரியால் - மனிதவள மேம்பாடு
13. அர்ஜூன் முண்டா - பழங்குடியினர் நலம்
14. ஸ்மிருதி இரானி - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, டெக்ஸ்டைல்
15. ஹர்ஷவர்தன்-சுகாதாரம், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் புவி அறிவியல்
16. பிரகாஷ் ஜவடேகர் - சுற்றுச்சூழல், வனம், தகவல் ஒளிபரப்பு
17. பியூஸ் கோயல் - ரயில்வே, வர்த்தகம், தொழில்
18. தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் ஸ்டீல்
19. முக்தார் அப்பாஸ் நக்வி- சிறுபான்மையினர் நலன்
20. பிரகலாத் ஜோஷி - நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி மற்றும் சுரங்கம்
21. மகேந்திரநாத் பாண்டே- திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் நலம்
22. அரவிந்த் சாவந்த்- கனரக தொழில்.
23. கிரிராஜ் சிங்- வன விலங்கு, பால், மீனவர் நலம்.
24. கஜேந்திர சிங் செகாவத்- நீர் பாசனம்.
இணையமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)
1. சந்தோஷ்குமார் கங்குவார்- தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு.
2. ராவ் இந்திரஜித் சிங்- புள்ளியியல், அமலாக்கம் மற்றும் திட்டம்
3. ஸ்ரீபாதயசோ நாயக்- பாதுகாப்பு, ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி
4. டாக்டர் ஜிதேந்திர சிங்- வடகிழக்கு மேம்பாடு, பிரதமர் அலுவலகம், பொதுநலன், பென்ஷன், அணுசக்தி, விண்வெளி.
5. கிரண் ரிஜிஜு- இளைஞர் நலம், விளையாட்டு, சிறுபான்மையினர் நலம்.
6. பிரகலாத் சிங் படேல்- கலாச்சாரம், சுற்றுலா.
7. ராஜ்குமார் சிங்- மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மேம்பாடு.
8. ஹர்தீப் சிங் பூரி- வீட்டு வசதி, விமானம், வர்த்தகம், தொழில்.
9. மன்சுக் மாண்டவியா- கப்பல், ரசாயனம், உரம்.
இணையமைச்சர்கள்
1. பஹன் சிங் குலாத்தே- ஸ்டீல்
2. அஸ்வினி குமார் சவுபே- சுகாதாரம், குடும்ப நலம்.
3. அர்ஜூன் ராம் மேக்வால்- பாராளுமன்ற விவகாரம், கனரக தொழில்.
4. வி.கே.சிங்- சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை.
5. கிரிஷன் பால் குர்ஜார்- சமூக நீதி.
6. தன்வீ ராசாகேப் தடா ராவ்- உணவு, பொது விநியோகம்.
7. கிஷன் ரெட்டி- உள்துறை.
8. புருசோத்தம் ரூபாலா- வேளாண், விவசாயிகள் நலன்.
9. ராம்தாஸ் அத்வாலே- சமூக நீதி.
10. சாத்வி நிரஞ்சன் ஜோதி- ஊரக மேம்பாடு.
11. பாபுல் சுப்ரியோ- சுற்றுச் சுழல், வனம், தட்பவெட்ப நிலை.
12. சஞ்சீவ் பல்யான்- வன விலங்கு, பால், மீனவர்.
13. சஞ்சய் சம்ராவ் தோட்ரே- மனிதவள மேம்பாடு, தகவல் தொடர்பு, எலக்ட்ரானிக், தகவல் தொழில்நுட்பம்.
14. அனுராக் தாக்குர்- நிதி, கம்பெனி விவகாரம்.
15. சுரேஷ் அங்கடி- ரயில்வே.
16. நித்யானந்த் ராய்- உள்துறை.
17. ரத்தன்லால் கட்டாரியா- நீர்பாசனம், சமூக நீதி.
18. முரளீதரன்- வெளியுறவுத் துறை, நாடாளுமன்ற விவகாரம்.
19. ரேணுகா சிங் சருடா- பழங்குடியினர் நலம்.
20. சோம் பர்காஷ்- வர்த்தகம், தொழில்.
21. ராமேஷ்வர் டெலி- உணவு பதப்படுத்தும் தொழில்.
22. பிரதாப் சந்திர சாரங்கி- சிறு, குறு, நடுத்தர தொழில், வனவிலங்கு, பால், மீனவர் நலன்.
23. கைலாஷ் சவுத்ரி- வேளாண், விவசாயிகள் நலன்.
24. தேவஸ்ரீ சவுத்ரி- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு.