tamilnadu

img

உத்தரகாண்ட் பாஜக தலைவர் கொரோனாவிற்கு உயிரிழப்பு...

டேராடூன் 
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்ட்டில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அங்கு தினசரி பாதிப்பு 500-க்கு மேல் உள்ள நிலையில், இதுவரை 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 341 பேர் பலியாகிய நிலையில், 16,648 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்நிலையில், அம்மாநிலத்தின் பாஜக தலைவரான கியான் சிங் நேகி கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார். தனிமை மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பொழுதிலும் சிகிச்சை பலனின்றி இன்று (செப்., 8) அவர் உயிரிழந்தார். 
உயிரிழந்த கியான் சிங் பாஜக தலைவருமின்றி உத்தரகாண்ட் அரசில் இணை அமைச்சராகவும், கிராமப்புற சுகாதார ஆலோசனை குழு தலைவராகவும் நேகி இருந்துள்ளார்.