tamilnadu

img

இரயில்கள் தனியார்மயம்... சு.வெங்கடேசன் கேள்விக்கு பியூஸ் கோயல் பதில்

புதுதில்லி:
நடப்பு நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடரில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரயில்கள் தனியார்மயம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு இரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்:

கேள்விகள்
1. தேஜஸ் விரைவுவண்டி போன்றசொகுசு இரயில்வண்டியை உள்நாட்டில் பெருநிறுவனங்கள் தொடங்க அனுமதிப்பதற்கு அரசு சிந்தித்து வருகிறதா என்பதைத் தெரிவிக்கவும்?
2. அவ்வாறெனில், அதன் விபரங்கள் மற்றும் அதற்கான காரணங்கள்?
3. நாடு முழுவதும் தனியார் இரயில் இயக்குபவர்களுக்காக அதிக வழித்தடங்களைக் கண்டறிவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்களின் குழு ஒன்றினை அமைத்து ள்ளதா என்பதைத் தெரிவிக்கவும்? மேலும் 24 சாத்தியமான வழித்தடங்களைக் கண்டறிந்துள்ளதா என்பதைத் தெரிவிக்கவும்?
4. அப்படியெனில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலம் / யூனியன்பிரதேசம் வாரியாக  அதன் விபரங்களைத் தெரிவிக்கவும்.
5. ஆர்வமுள்ள, தகுதியுடைய நிறுவனங்களிடமிருந்து ஏலம் விலை கேட்பதை வரவேற்பதற்கு அரசுதிட்டமிட்டிருக்கிற காலம் எவ்வள வென்பதைத் தெரிவிக்கவும்.
6.இது சில மாநிலங்களில் எதிர்க்கப்பட்டதா என்பதைத் தெரிவிக்கவும்?  அதன் மீதான அரசின் நிலைபாட்டுடன், அதன் விபரங்களைத் தெரிவிக்கவும்.
7. தனியார்மயத்தின் விளைவாக இரயில் பயணக் கட்டணங்கள் அதிகரிக்குமா என்பதைத் தெரி
விக்கவும்? மேலும், அப்படியெனில், இரயில்வேயில் பல்வேறு பிரிவுகளி லிருந்து இந்த வழித்தடங்களில் பயணிக்கும் குடிமக்களுக்கான மானியங்கள் நீடிக்குமா என்பதைத் தெரி விக்கவும். அவ்வாறெனில், அதற்கான விபரங்களைத் தெரிவிக்கவும்.

பதில்கள்
இந்திய இரயில்வே வலைப்பின்னல் முழுவதுமாக உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் இரயில்களை இயக்குவதற்கு தனியார் பயணிகள் ரயில் இயக்குபவர்களுக்கு அனுமதியளிப்பதற்கு, மற்றவற்றிற்கிடையில், ஓராண்டுகால அவகாசத் துடன் ஒரு செயலாளர்களின் குழு வினை கீழ்க்கண்ட விதிமுறைகளுடன் (GoS) இரயில்வே அமைச்சகம் அமைத்துள்ளது:
ஐ ) ஏல ஆவணங்களுடன் ஏல முறைக்கான ஒப்புதல். 
ஐஐ) ஏல முறையினைக் கண்காணித்தல் மற்றும் ஒரு குறிப்பிட்ட கால வரைமுறையில் திட்டங்கள் வழங்குவதை உறுதி செய்வதற்கான முடிவுகளை எடுப்பது.
இப்போதைக்கு, மூன்று கூட்டங்களை செயலாளர்களின் குழு கூட்டியுள்ளது. வழித்தடங்கள், தொடர்பான வழிமுறைகள், கட்டணக்கட்டமைப்பு, மானியங்கள்,  இன்னபிற;  இதுபோன்றவை இறுதிப்படுத்தப்படவில்லை.இணைவிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுடன், இரண்டுஅங்கீகரிக்கப் பட்ட இரயில்வே ஊழியர் சம்மேள னங்கள் மற்றும் மண்டல இரயில்வேக்களில் உள்ள இதர தொழிற்சங்கங்களி டமிருந்து பயணிகள் ரயில்கள் தனியார்மயம் தொடர்பாகச் சில கோரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.