புதுதில்லி:
கொரோனா தொற்றுப் பாதிப்புமற்றும் பொதுமுடக்கம் காரணமாக, இந்தியாவின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை, நடப்பாண்டில் 15 டிரில்லியன் டாலர்அளவிற்கான இழப்பை சந்திக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
இது கடந்த மார்ச் மாதத்தில் மதிப்பிடப்பட்ட 5 டிரில்லியன் டாலர் இழப்பை விட மூன்று மடங்கு அதிகமாகும்.இந்தியாவில் சுற்றுலாத் துறையின் நேரடி மற்றும் மறைமுக தாக்கம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 சதவிகிதம் என மதிப்பிடப்படுகிறது. கொரோனா வைரஸானது நாடு முழுவதும் மிகவேகமாக பரவிவரும் நிலையில், இந்தியாவில் கடந்த 5 மாதங்களாகவே சுற்றுலாத்துறை முடங்கியுள்ளது. இந்நிலையில், அடுத்த ஐந்து மாதங்களுக்கு இத்துறை மீண்டெழு
வதற்கான வாய்ப்பு இல்லை என்பதால், சுமார் 15 டிரில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்படும் என்றுகணிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் விருந்தோம் பல் துறையுடன் இணைந்த விமானநிறுவனங்கள், பயண முகவர்கள்,ஹோட்டல்கள், டூர் ஆப்பரேட்டர் கள் முதல் சுற்றுலா இடங்களில் உள்ள உணவகங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், வழிகாட்டிகள் என அனைத்துமே பாதிக்கப் பட்டுள்ளன. இத்தொழில்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 4 கோடி பேர் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்கள் வேலையிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.