tamilnadu

img

டாப் 5 செய்திகள்... (தேசிய அளவில்)

விமானத்துறையில்  30 லட்சம் வேலையிழப்பு!
கொரோனா பாதிப்பால் இந்திய விமானப் போக்குவரத்து மற்றும் அது சார்ந்த துறைகளில் 30 லட்சம் பேர் வேலையிழப்பார்கள்; 11 ஆயிரத்து 610 மில்லியன்டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் என்று சர்வதேச விமானப் போக்குவரத்துக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

பதவி கொடுத்து ஆள்பிடிக்கும் பாஜக!
ம.பி. காங்கிரஸ் எம்எல்ஏ பிரத்யும்னா சிங் லோதி, பாஜக-வில் சேர்ந்த உடனேயே அமைச்சர் அந்தஸ்துள்ள, மாநில உணவுப்பொருள் வழங்கல் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனை வாங்கிக்கொண்டு “எனக்குப் பதவி முக்கியமல்ல.. மக்கள் சேவையே பிரதானம்’’ என்று லோதி ‘முழங்கி’யுள்ளார்.

ஜூன் காலாண்டில் மட்டும்  14% பொருளாதார வீழ்ச்சி!
ஏப்ரல் - ஜூன் காலாண்டில், இந்தியப் பொருளாதாரம் மிக மோசமாக 14.2 சதவிகித வீழ்ச்சியில்  உள்ளது; இந்த வீழ்ச்சி நடப்பாண்டில் 4.5 சதவிகிதமாக குறையலாம்; வளர்ச்சி ஏற்பட்டாலும் அது 1.5சதவிகிதத்தைத்  தாண்டாது என்று  வர்த்தகம் மற்றும் தொழிற்துறைக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பாஜக கூட்டணிக்கு வந்தால் நிதியுதவி..
மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக நிதி வழங்க வேண்டுமென்றால் என்சிபி தலைவர் சரத்பவார், பாஜக கூட்டணிக்கு வரவேண்டும் என மத்தியஅமைச்சரும், இந்திய குடியரசுக் கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். 

காஷ்மீர் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை!
ஜம்மு - காஷ்மீரில் கொரோனா தொற்றுபாதிப்பின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 500-ஐ தாண்டிவிட்டது. 190 பேர் வரை  உயிரிழந்துள்ள னர்.  இந்நிலையில், ஸ்ரீநகரில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.