tamilnadu

img

இன்று,நாளையும் நாடாளுமன்ற அனைத்துக்கட்சிகள் கூட்டம்

புதுதில்லி,நவ.15- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 அன்று துவங்கி டிசம்பர் 13 வரை நடைபெற உள்ளது. இந்நிலை யில் நாடாளுமன்ற கூட்டத்தை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்க, நவம்பர் 16 ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். நவம்பர் 17 அன்று நாடாளு மன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தலைமையில் மற்றொரு அனைத்துக்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மத்திய அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆதர வளித்து, நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்கும்படி எதிர்க்கட்சிகளிடம் கேட்கப்படும் என்று தெரிகிறது.