tamilnadu

img

சிஏஏ-வால் பாதிப்பு யாருக்கு; பலன் யாருக்கு, பதில் உண்டா? அமித்ஷாவுக்கு ப. சிதம்பரம் கேள்வி

அமித்ஷாவுக்கு ப. சிதம்பரம் கேள்வி

புதுதில்லி, மார்ச் 2- குடியுரிமைத் திருத்தச் சட் டத்தால் (சிஏஏ), யாரும் பாதிக் கப்படமாட்டார்கள் என்றால், அந்த பட்டியலில் முஸ்லிம் களை இணைக்காதது ஏன்? என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி யுள்ளார்.  “மத்திய அரசு கொண்டுவந் துள்ள ‘சிஏஏ’ சட்டத்தால், எந்த ஒரு நபரும் குடியுரிமையை இழக்கமாட்டார்கள். எதிர்க்கட்சி கள் சேர்ந்து சிறுபான்மை மக்க ளைப் பதற்றத்தில் வைத்துள் ளன. குடியுரிமை வழங்கத்தான் ‘சிஏஏ’ சட்டம் கொண்டுவரப்பட் டுள்ளது. யாருடைய குடியுரிமை யையும் பறிக்க அல்ல!” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கொல்கத்தாவில் பேசியிருந் தார். இதற்கு ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையினர் யாரும் பாதிக்க மாட்டார்கள் என, உள்துறை அமைச்சர் சொல்கிறார். அது சரி என்றால், இந்த சட்டத்தால் யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாட்டுக்கு அவர் சொல்ல வேண் டும். குடியுரிமைத் திருத்தச் சட் டத்தால் சிறுபான்மையினருக்கு பலன்கள்தான் கிடைக்கும் என்றால், சிஏஏ பட்டியலிலிருந்து முஸ்லிம்களை நீக்கியது ஏன்? என்பதற்கு அவர் பதிலளிக்க வேண்டும்” என்று ப. சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.