புதுதில்லி:
பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவில் விசாரித்துதீர்ப்பளிக்க ஆயிரம் விரைவு நீதிமன்றங்கள் நாடு முழுவதும்ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பான மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்புடன் 767 கோடி ரூபாய் செலவில் விரைவு நீதிமன்றங்கள்அமைக்கப்படும். அதிக அளவில் பாலியல் வன்கொடுமைகள்நிகழும் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 218 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இதற்கான ஒப்புதலை உத்தரப்பிரதேச அரசிடம் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.