புதுதில்லி:
கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும், முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது கடும் விமர்சனத்தை வைத்திருந்தார். கெஜ்ரிவால் மட்டமானவர் என்றும், அவரைப் போல ஒரு முதல்வரைப் பெற்றதற்கு அவமானப்படுவதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து, தன்னைப் பற்றி அவதூறு கருத்தை பரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கம்பீருக்கு கெஜ்ரிவால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.