ரேவா:
மத்தியப்பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் குளக்கரை ஒன்றை அழகுபடுத்தப் போவதாக கூறி, அங்குள்ள தலித் மக்களின் வீடுகள் இடித்துத் தரைமட் டம் ஆக்கப்பட்டுள்ளன.
மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ்ஆட்சி நடைபெற்று வந்தது. இந் நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு, குதிரைபேரம் மூலம் அந்த ஆட்சியைக் கவிழ்த்து, குறுக்கு வழியில் பாஜக அதிகாரத்திற்கு வந்தது. சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வரானார்.
இந்நிலையில்தான் மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் தலித் மக்களின் வீடுகளைஇடித்து பாஜக அரசு அராஜகத் தில் ஈடுபட்டுள்ளது.ரேவா மாவட்டம் ஆர்.என். திரிபதி பகுதியில் உள்ள குளக்கரைஒன்றை நவீன முறையில் அழகுபடுத்த சவுகான் தலைமையிலான மாநில பாஜக அரசு முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக அந்த பகுதியில் இருந்த, தலித்மக்களின் வீடுகளை பொக்லைன் இயந்திரங்களுடன் சென்று இடித்து தரைமட்டமாக்கி உள்ளது.கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து, தலித் மக்கள், ஏற்கெனவே வறுமையில் உழன்று வந்தநிலையில், மாநில பாஜக அரசு அவர்களின் வீடுகளையும் இடித்து,நிர்க்கதி ஆக்கியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. பாஜக அரசின் இந்த செயல் கொஞ்சமும் மனச்சாட்சி இல்லாத ஈவிரக்கமற்ற நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித் துள்ளன.