இஸ்லாமாபாத்
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது. அங்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் எழுச்சி பெற்ற கொரோனா வைரஸ் இன்று வரை ராக்கெட் வேகத்தில் பரவி அந்நாட்டு மக்களை வீடுகளுக்குள் முடக்கி வைத்துள்ளது. இந்தியாவை போல அந்நாட்டு பிரதமர் கொரோனவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என உத்தரவிட்டு ஊரடங்கை தளர்த்தும் முன்னப்பில் இருக்கிறார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 6 ஆயிரத்து 397 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 1 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 107 பேர் பலியாகியுள்ள நிலையில், உயிரிழந்தோர்களின் மொத்த எண்ணிக்கை 2463 ஆக அதிகரித்துள்ளது. 40 ஆயிரம் பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர்.