கோவா சட்டப்பேரவையில் அரட்டையரங்கம்
கோவா சட்டப்பேரவையில் அரட்டையரங்கம்
பனாஜி, பிப்.6- கோவா மாநிலத்தில் வனவிலங்கு கள் சரணாலய பகுதிகளில் உள்ள புலி கள், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிரா மங்களுக்குள் நுழைந்து பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகளை தாக்கி அவற்றை சாப்பிடுவது அண்மைக்கால மாக அதிகரித்துள்ளது. இதனால் சில நேரங்களில், பொது மக்கள் ஆத்திரமடைந்து, புலிகளை அடித்துக் கொல்வதும் நடக்கிறது. கடந்த மாதம் மகதாயி வனவிலங்குகள் சரணாலயத்தில் ஒரு பெண் புலி மற்றும் அதன் மூன்று குட்டிகளை அப்பகுதி மக்கள் கொன்றுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, கோவா சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலை வர் திகம்பர் காமத் கவன ஈர்ப்புத் தீர்மா னம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளார். அது பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது, பசுவைக் கொன்று அதன் இறைச்சியை சாப்பிடும் மனிதனுக்கு தண்டனை வழங்கப்படும்போது, பசுவை சாப்பிடும் புலிகளுக்கு என்ன தண்டனை? என்று என்சிபி எம்எல்ஏ சர்ச்சில் அலேமாவோ, அறிவுப்பூர்வ மான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். மேலும், “பசுக்களை அடித்து சாப்பி டும் புலிகளுக்கும் தண்டனை வழங்கப் பட வேண்டும்” என்றும், “வனவிலங்கு களைப் பொறுத்தவரை புலிகள் முக்கி யம்தான்; ஆனால் மனிதர்களுக்கு பசுக் கள் முக்கியம்” என்றும் கூறியுள்ளார். இதற்கு முதல்வர் பிரமோத் சாவந்த் பதிலளித்துப் பேசியுள்ளார். அப்போது, “தங்கள் கால்நடைகளை புலிகள் தாக்கியதால்தான் அவற்றை பொதுமக்கள் கொன்றுள்ளனர்; எனவே, விலங்குகள் தாக்கியதால் கால்நடை களை இழந்த விவசாயிகளுக்கு மூன்று அல்லது நான்கு நாட்களில் நிவாரணம் வழங்கப்படும்” என்று சமாதானம் செய் துள்ளார்.