tamilnadu

img

பெயர் கூற விரும்பாதவர்களே ‘ஹவுதி மோடி’-க்கு செலவிட்டனர்

புதுதில்லி:
அமெரிக்காவில் நடைபெற்ற மோடியின் நிகழ்ச்சிக்கு, பெயர் தெரிவிக்க விரும்பாதவர்களே நிதி வழங்கினார்கள் என்று பாஜக தலைவர் ஒருவரே வாக்குமூலம் அளித்துள்ளார்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனில் செப்டம்பர் 22 ஆம் தேதி நடந்த ‘ஹவுதி மோடி’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய வம்சாவழியினர் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்புடன் மோடி ஒன்றாக தோன்றினார். மிகப்பிரம்மாண்டமான முறையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனிடையே, ‘ஹவுதி மோடி’ நிகழ்ச்சிக்கு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம்கோடி வரை செலவிடப்பட்டு உள்ளதாகவும், இதனை யார் செலவிட்டது? என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். இந்திய - அமெரிக்க அரசுகளின் செலவா, பாஜக-வின் செலவா? என்று வேறுபலரும் கேட்டனர். ஆனால், ஹவுதி மோடி நிகழ்வு அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய தன்னார்வலர்களால் ஏற்பாடு செய்யபட்டதாகவும் ஆளும் பாஜகவோ அல்லது மத்திய அரசோ இதற்குப் பின்னால் இல்லை என்றும் பாஜக-வின் வெளிநாட்டு விவகாரங்கள் துறைத்தலைவர் விஜய் சௌதைவாலே பதிலளித்துள்ளார்.அத்துடன் நிற்காமல், “தன்னார்வலர்களில் ஒரு பெரும் பகுதியினர் இந்த நிகழ்வுக்கு நிதியளித்தனர். அவர்கள் பெயர் குறிப்பிடாமல் இருக்க விரும்பினர். அதற்குப் பிரதிபலன் எதையும் அவர்கள் விரும்பவில்லை” என்றும் உளறிக்கொட்டியுள்ள சௌதை வாலே, “நிகழ்வின் மொத்தச் செலவு குறித்து தனக்கு எதுவும் தெரியாது” என்றும் மழுப்பியுள்ளார்.